புகழ்பெற்ற தமிழ் கவிஞர், தெய்வப்புலவர் என போற்றப்படும் திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் 133 அடி உயர சிலை எழுப்பியத்தின் வெள்ளி விழாவை கொண்டாடும் விதமாகவும், அவர் எழுதிய உலக பொதுமறையான திருக்குறளை போற்றும் விதமாகவும் அறிவுசார் நிகழிச்சிகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக திருக்குறளின் மேலாண்மையை விளக்கும் கருத்தரங்கம் கல்லூரி அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முனைவர் நீலகண்ட பிள்ளை (தமிழ் உயராய்வு மையம், தெ. தி. இந்து கல்லூரி) அவர்கள் கலந்துகொண்டு திருக்குறளில் அமைந்துள்ள நற்சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் உரையாடினார்.
Share This Article